உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனுக்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக உக்ரைனுக்கு தங்களது முழு ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய யூனியனும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் கொடி பறந்துள்ளதாக காணப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஐரோப்பிய யூனியனில் இணைய வேண்டும் என்ற விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 27 நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய யூனியன்.
ஐரோப்பிய நாடாளுமன்றம் பெல்ஜியத்தில் உள்ளது. இந்த நாடாளுமன்றம் முன்பு தான் தற்போது உக்ரேன் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த கூட்டத்தின்போது உறுப்பு நாடுகளோடு கலந்தாலோசித்து உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
நீண்ட நாட்களாக ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைந்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேர்ந்து விடக்கூடாது என்று நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.