காற்று மாசை கட்டுப்படுத்த முடியவில்லை! ஏன் பள்ளிகளை திறந்தீர்கள்?: நீதிபதி கேள்வி;

இந்தியாவின் தலைநகரமான காணப்படுகிறது டெல்லி மாநகரம். ஆனால் டெல்லி மாநகரம் தற்போது ஆபத்தில் சிக்கி உள்ளது. ஏனென்றால் தில்லியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காற்று மாசு அதிகரித்துள்ளது, அதோடு தற்போது குளிர்காலம் என்பதால் காற்றும், குளிரும் சேர்ந்து பெரும் பனி மூட்டம் போல டெல்லி மாநகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

superme court

இதனால் டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என பலரும் வீட்டில் இருந்து வேலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர பிற மக்களை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் சிலநாட்களாக காற்று மாசு குறைய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 29ம் தேதி முதல் டெல்லியில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வழியில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா டெல்லி அரசை கண்டித்து கூறியுள்ளார்.

அதன்படி நாங்கள் நினைத்தது போல டெல்லி அரசோ, மத்திய அரசோ காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எந்த ஒரு துரும்பையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும்போது குழந்தைகளுக்கு ஏன் பள்ளிகள், கல்லூரிகள் திறந்தீர்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலைகள் மற்றும் இதர இடங்களில் இருந்து வரும் புகை களை கட்டுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இல்லையென்றால் நாங்களே அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment