திடீர் உடல் நலக்குறைவு!! இயக்குநர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!!

இயக்குநர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக தி.நகர் தனியார் மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர், இயக்குனரான பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக கடந்த 23-ஆம் தேதி சென்னை தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்தனர்.

குறிப்பாக உடலின் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் உடல்நிலை சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அதோடு தொடர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து கவிஞர் வைரமுத்து, கலைபுலி தாணு ஆகியோர் வருகை தந்து உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. அதோடு ஏராளமான திரை பிரபலங்கள் வருகை தருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம் படத்தில் பாரதிராஜாவின் நடிப்பானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.