
News
அமைதியாக நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது ஏன்? எங்கு தப்பு நடந்தது?
கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த போராட்டமானது மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டு வந்ததாக காணப்பட்டது. ஏனென்றால் இலங்கையில் தினம்தோறும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் தேவை மற்றும் விலையும் அதிகரித்தது.
இதன் காரணமாக ஆங்காங்கே போராட்டக்காரர்கள் கிராமங்கள் அமைத்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று திடீரென்று போராட்டம் கலவரத்தில் முடிந்து அனைத்து பகுதிகளிலும் காட்டுத்தீ போல வெடித்து காணப்படுகிறது.இதற்கான காரணம் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் வீட்டு முன்பாக போராட்டக்காரர்கள் அமைதியான வகையில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வந்தவர்கள் மீது ராஜபக்சே அழைத்து வந்த குண்டர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
பஸ்களில் அழைத்து வரப்பட்ட குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கொழும்பு பகுதிகளில் வன்முறை வெடித்தது. ராஜபக்சே பதவி விலகுவார் என்ற செய்தி வெளியான நிலையில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
திடீர் தாக்குதலுக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள், குண்டர்கள் மீதும் அவர்கள் வந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். ராஜபக்சே ஆதரவாளர்கள் பயணித்த கார், பேருந்துகளை ஏரியில் தூக்கி வீசியும் போராட்டக்காரர்கள் ஆவேசம் அடைந்தனர்.
