News
டாஸ்மாக்கும் சட்டமன்றமும் என்ன பாவம் செய்தது? துரைமுருகன் கேள்வி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலிருக்க அனைத்து கல்வி நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது என்பது பாராட்டுக்குரியது. ஆனால் அதே நேரத்தில் டாஸ்மாக்கும் சட்டமன்றமும் மட்டும் என்ன பாவம் செய்தது? இவை இரண்டும் மட்டும் மூடப்படாமல் இருப்பது ஏன்? என திமுக எம்எல்ஏ துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதனை அடுத்து டாஸ்மார்க் மற்றும் சட்டமன்றமும் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று டாஸ்மாக் மற்றும் சட்டமன்றத்தை மூட தமிழக அரசு முன்வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
