Connect with us

குடியரசுதின வாகன அணிவகுப்பில் தமிழகம் நிராகரிப்பு ஏன்? வஉசி, வேலு நாச்சியாரை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது!!

republic day function

செய்திகள்

குடியரசுதின வாகன அணிவகுப்பில் தமிழகம் நிராகரிப்பு ஏன்? வஉசி, வேலு நாச்சியாரை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது!!

குடியரசுதின வாகன அணிவகுப்பில் தமிழகம் நிராகரிப்பு ஏன்? வஉசி, வேலு நாச்சியாரை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது!!

இனி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டம் ஜனவரி 23ம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை சேர்த்து கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குடியரசு தின வாகன அணிவகுப்பில் தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி குடியரசு தின வாகன அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பிரபலமானவர்கள் இல்லை எனக்கூறி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வாகனத்தில் வஉசி, வேலுநாச்சியார் படங்கள் இருந்த நிலையில் மத்திய அரசு அதனை நிராகரித்துள்ளது. நாலாவது சுற்று வரை சென்ற நிலையில் தமிழக அரசின் அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தலைவர்களுக்கு வஉசி, வேலு நாச்சியாரை தெரியாது எனக் கூறியும் நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தென் மாநிலத்தில் கர்நாடக மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top