
செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த போது ஏன் தமிழக அரசு குறைக்கவில்லை?
இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியாவின் இரண்டு அவைகளும் வருகின்ற திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கூடிய நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், திமுக கட்சியினர் வெளிநடப்பு செய்ததாக தகவல் கிடைத்தது.
அதன்படி இன்று மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஏனென்றால் அவர்கள் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு வரும் நிலையில் அவையை விட்டு வெளிநடப்பு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கமிட்டு அவையை விட்டு வெளியேறினர்.
அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த போது தமிழக அரசு ஏன் குறைக்கவில்லை என்ற கேள்வியையும் கேட்டார்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதமே குறைத்து விட்டதாக பிரதமர் மோடி ஒரு காணொளி கூட்டத்தில் கூட கூறியிருந்தார்.
அதன் பின்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பெட்ரோல், டீசல் விலையானது நம் தமிழகத்தில் மிகவும் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
