Entertainment
ஓடிடி ரிலீசுக்கு காரணம் சூர்யாவின் இந்த பயமா? அதிர்ச்சித் தகவல்

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை திரையரங்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என சூர்யா, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் உறுதியாக இருந்தனர். அதற்காகத்தான் சென்சார் சென்று சென்சார் சான்றிதழும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென சூர்யா ஒடிடி முடிவை எடுத்தது இயக்குனர் சுதா கொங்கராவுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்ததாம். இதுகுறித்து விசாரித்தபோது சமீபத்தில் சூர்யா தனது நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்துள்ளார்
அப்போது படத்தை பார்த்த பலரும் படம் சூப்பராக இருக்கிறது, நன்றாக இருக்கிறது என வாழ்த்தினார்கள். ஆனால் உண்மையான நடுநிலையாளர்கள் சிலர் இந்த படம் நிச்சயம் ஏ சென்டர்களில் ஹிட்டாகும், ஆனால் பி,சி சென்டர்களில் உள்ளவர்களுக்கு இந்த படம் புரியுமா என்பது சந்தேகமே என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டதும் சூர்யா கடும் அதிர்ச்சி அடைந்தாராம். ஏற்கனவே வரிசையாக தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சூர்யா இந்த படமும் பி, சி சென்டர்களில் சரியாகப் போகாமல் தோல்வியடைந்தால் தன்னுடைய மார்க்கெட்டுக்கு உலை வைத்து விடும் என்ற அச்சத்தினால் தான் அவர் ஓடிடி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது
