பெண்களே….இதை முதல்ல கவனிங்க….பூ வைத்துக் கொள்வதில் இவ்வளவு விசேஷம் இருக்கா?

பெண்களுக்கு அழகு தலையில் பூ வைத்துக் கொள்வது. பூவையர் என்ற பெயர் கூட அதனால் தான் உள்ளது. இது தமிழர் பண்பாடு. பார்க்கறதுக்கு அழகாக இருக்கும் என்பது மட்டுமல்ல. பூக்கள் வைக்கும் போது அதிலிருந்து எழக்கூடிய வாசனை நமக்குள் பல நல்லவிதமான மாற்றங்களை உண்டாக்குகிறது.

முக்கியமாக கோபத்தைக் குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது. மூளையில் உள்ள நல்ல ஹார்மோன் சுரக்க துணைபுரிகிறது. முக்கியமாக ஹேப்பி ஹார்மோன் என்று சொல்லும் செரட்டோனின் சுரக்க இது உதவுகிறது.

பூ வைக்கும் பெண்களுக்கு இஎஸ்பி பவர் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இஎஸ்பி பவர் என்பது கூரிய மதிநுட்பம் என்று பொருள். அறிவை விட ஒருபடி மேலான கூரிய அறிவு தான் இதன் முழுமையான விளக்கம். பெண்ணறிவு நுண்ணறிவு என்றும் இதனால் தான் சொல்கிறார்கள். கிராமங்களில் பெரியவர்களில் ஒரு சிலர் கூறு கெட்டவள் என்ற வார்த்தையை சொல்லி திட்டுவதைப் பார்த்து இருப்போம். இதன் உண்மையான பொருள் கூர்த்த மதி இல்லாதவள் என்பது தான்.

நிதானத்தையும், பொறுமையையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய ஆற்றல் வாய்ந்தது மலர்கள். அதனால் தான் பெண்கள் இந்த பூவை விரும்பி தலையில் அணிந்து கொள்கின்றனர். அதனால் தான் இதை தினமும் தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் நமக்கு மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

girl with poo
girl with poo

பூ இல்லாமல் பெண்கள் வெளியே போகக்கூடாது. தலையில் சிறிதளவாவது பூ வைக்க வேண்டும். பெண்ணுக்கு அழகு பூ வைப்பது. இது சாதாரண அழகை பேரழகாக மாற்றி விடும். எந்த விதமான சுபகாரியங்களாக இருந்தாலும் சரி. பூஜைக்கு என்றாலும் சரி. மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

துக்க வீட்டுக்குச் சென்றாலும் பூ வைக்க என்ன காரணம்? அங்கும் மன இறுக்கமாகத் தான் எல்லோரும் இருப்பார்கள். மன அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தான் பூ வைக்கிறார்கள். அதே போல திருமணமானவுடன் பூ வைப்பதைக் குறைத்துக் கொள்ளக்கூடாது.

poo
poo

பெண்கள் பூ வைப்பது அவர்கள் பிறக்கும் போது இருந்தே காலம் காலமாகக் கடைபிடித்து வருகிற விஷயம் தான். பூ என்பது அன்பின் அடையாளம். மனைவி கணவன் வாங்கிக் கொடுக்குற பொருள்களில் பூவைத் தான் பெரிதும் விரும்புகிறாள்.

காதலின் வெளிப்பாடு. அன்பின் வெளிப்பாடு. மனைவியை எங்காவது வெளியில் அழைத்துச் சென்றால் கண்டிப்பாக ரெண்டு முழம் பூ வாங்கிக் கொடுங்க. இது மனைவிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு இடத்துக்குப் போகும்போது தலையில் பூ இருக்கணும்ங்கறது அலங்காரத்துக்காக மட்டுமல்ல. பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ளத்தான்.

jasmine
jasmine

பெண்குழந்தைகளை வளர்க்கும்போது இது ஒரு அழகு, இது ஒரு ஆபரணம் என சொல்லி வளர்த்து வர வேண்டும். பெண் குழந்தைகளுக்குத் தலையில் பூ வைத்தால் அந்த அறிவுத்திறன் இன்னும் மேம்படும். ஆண் குழந்தைகளாக இருந்தால் அம்மா தலையில் பூ வைத்துக் கொள்வார். அதன் வாசனையானது ஆண்குழந்தைகளுக்கு மன அமைதியை உண்டுபண்ணுகிறது.

இதனால் ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படுகிறது. வாசனை நிறைந்த இடத்தில் எப்போதும் இருந்தால் மன மகிழ்ச்சி எப்போதும் நம்மிடம் இருக்கும். பெண்களுக்கான மங்கலகரமான பொருள். இது நமக்கு மட்டுமல்ல. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்தும். மல்லிகைப் பூ மகிழ்ச்சியையும், நம்மை சுற்றியும் ஒருவித அமைதியை ஏற்படுத்தும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...