Connect with us

மலர் கொடுத்து மன்றாடிய விவசாயிகள்… ஓசூரில் பிளாஸ்டிக்கிற்கு எதிராக நூதன பிரச்சாரம்!

Farmer

தமிழகம்

மலர் கொடுத்து மன்றாடிய விவசாயிகள்… ஓசூரில் பிளாஸ்டிக்கிற்கு எதிராக நூதன பிரச்சாரம்!

ஓசூரில் பிளாஸ்டிக் பூக்களை தவிர்க்க வேண்டும், விவசாயிகள் பொதுமக்களுக்கு மலர்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிளாஸ்டிக் பூக்களை தவிர்க்க வேண்டும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலர்களை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

ஓசூர் ,தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர்,பேரிகை போன்ற பகுதிகளில் தகுந்த சீதோசன நிலை உள்ளதால் இங்கு பசுமை குடில்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் விவசாயிகள் ரோஜா மலர்கள் ஜெர்பரா மற்றும் கார்னேஷன் பூக்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர்.

தற்போது மத்திய மாநில அரசுகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது , இந்த நிலையில் திருமணம் மற்றும் பொது திருவிழாக்களில் பிளாஸ்டிக் பூக்களை மேடைகள்,அலங்கார வளைவு பகுதிகளில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர், இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் மலர்கள் பெருமளவில் தேக்கமடைந்து லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது

எனவே பிளாஸ்டிக் பூக்கள் தவிர்க்க வேண்டும் என ஓசூர் பேருந்து நிலையத்தில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யப்பட்ட மலர்களை கொண்டு வந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பிளாஸ்டிக் பொருட்களான மலர்களை இனி பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top