நோட்டா ஏன் இடம் பெறவில்லை? எங்களை பார்த்தும், நோட்டாவை பார்த்தும் சிலருக்கு பயம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக யார் உள்ளவர் என்று கேட்டால் அனைவரும் கூறுவது உலகநாயகன் கமலஹாசன் தான். இவர் களத்தூர் கண்ணம்மா படத்தில் இருந்து இன்று விஸ்வரூப வளர்ச்சி அடைந்து உள்ளார் என்பது அவரின் கடின உழைப்பு தான் .
இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் இறங்கினார். அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்றினை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது, அந்த கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
இருப்பினும் தலைவர் கமலஹாசன் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தினம்தோறும் செய்தியாளர்களிடம் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்றோடு சேர்த்து 5வது ஆண்டு துவக்க விழா கொண்டாடிக் கொண்டு உள்ளது. அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேட்டி அளித்து வருகிறார்.
அப்போது அவர் வாக்குக்காக கொடுத்த பரிசு பொருட்களில் தரம் இல்லை என மக்கள் சொல்கிறார்கள் என்று பேசினார். மக்கள் நீதி மய்யத்தினை பார்த்தும், நோட்டாவை பார்த்தும் சிலருக்கு பயம் உள்ளது என்றும் அவர் கூறினார். நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இம்முறை நோட்டா ஏன் இடம்பெறவில்லை என்றும் தெரியவில்லை என கமலஹாசன் கூறினார்.
