சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துக்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?:நீதிபதிகள்
35 ஆண்டுகளுக்கு முன்பு சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டுள்ளனர். தாங்கள் அனுபவிக்கும் 31.37 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு ஒதுக்க மறுத்த வட்டாட்சியர் உத்தரவை எதிர்த்து சாஸ்தா பல்கலைக்கழகம் வழக்கு தொடுத்துள்ளது.
திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து விட்டு மாற்று இடம் வழங்குவதாக பல்கலைக்கழகம் கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அரசு அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கட்டுமானங்களுக்கு ஏன் அனுமதி கொடுத்தார்கள்? என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
பல்கலைக்கழகம் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஹை கோர்ட் நீதிபதி அமர்வு கூறியது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத வகையில் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக என தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
