தியேட்டர், மால் இயங்கும் போது தேர்தலை ஏன் நடத்தக் கூடாது? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார்!
அடுத்த மாதம் இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது தடை விதிக்க பலரும் மனு தாக்கல் செய்துள்ளது ஆச்சரியப்படத்தக்க காணப்படுகிறது. இது பற்றி உயர்நீதிமன்றமும் இதனைப் போலவே கருத்துக் கூறியது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை கான அறிவிப்பாணை தயாராக உள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அரசுடன் ஆலோசித்தே தேர்தலை நடத்த முடிவு எடுத்துள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தியேட்டர்கள் வணிக வளாகங்கள் எங்கும் போது கட்டுப்பாடுகளுடன் தேர்தலை ஏன் நடத்தக் கூடாது என்று கேள்வி நீதிபதிகள் வைத்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பின்பற்றவேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது .மூன்று பேருடன் மட்டுமே வேட்பாளர் வாக்கு சேகரிக்க வீடு வீடாக செல்ல வேண்டும் என விதிக்கப்பட்டதாக நீதிபதிகள் கூறினர்.
ஜனவரி 27-ஆம் தேதி அறிவிக்காவிட்டால் ஆணையம் உச்ச நீதிமன்ற அவமதிப்பு ஆளாகும் என்றும் நீதிபதிகள் கூறினர். கொரோனா காரணமாக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரும் வழக்கில் ஹைகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
