புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி;

புத்தாண்டுக்காக பல நாடுகளும் களைகட்டி தயார் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட தொடர்ச்சியாக தடை விதித்து வருகிறது. இதன் மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்றம் புதுச்சேரி மாநில அரசை கேள்வி கேட்டுள்ளது.

newyear cele

பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதாக புதுச்சேரி அரசு கூறியுள்ளது. கொரோனாவின் தாக்கம் கடுமையாக இல்லை என்பதால் ஒட்டுமொத்த தடை இல்லை என்றும் புதுச்சேரி அரசு கூறியுள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மாநில அரசு இத்தனை விளக்கத்தை அளித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு மதுபான விற்பனையை தடை செய்தால் என்ன? என்று புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

பொருளாதார நிலை மட்டுமின்றி, மக்களின் உயிரையும் கருத்தில் கொள்ள வேண்டாமா? என்றும் நீதிபதிகள் கேள்வி கேட்டனர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment