மெட்டி ஒலி உமா மகேஸ்வரிக்கு இந்த நோயா? ரசிகர்கள் அதிர்ச்சி

சன் டிவியில் ஒளிபரப்பாகி மெட்டி ஒலி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலை திடீரென காலமான செய்தி சின்னத்திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து உமா மகேஸ்வரி மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உமாமகேஸ்வரி உடன் பல தொடர்களில் நெருங்கி நடித்த நடிகை சாந்தி என்பவர் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் உமாமகேஸ்வரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டதாகவும் அதனால்தான் அவர் காலமானதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும் உமா மகேஸ்வரியை தனது மகள் போல பார்த்துக் கொண்டதாகவும் அவரது மறைவு தன்னை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்றும் ஏற்கனவே சித்ரா மறைவிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது உமாவின் மறையும் தன்மை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment