காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தது ஏன்?… கமல் கொடுத்த பளீச் பதிலடி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செயற்குழு உறுப்பினர்களுடன் சுமார் 1 மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ;- காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலின் நிலைபாடு குறித்த கேள்விக்கு ?பதிலளித்தவர் நாங்கள் தற்போது எடுத்திருக்க முடிவு என்பது ஒரு அவசர முடிவு நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடம் கழித்து எடுக்க வேண்டிய முடிவை அவசரப்படுத்தி பெற முடியாது.

எம்.பி.ஆகும் ஆசை உள்ளதா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் முதலமைச்சர் என்று சொல்லும் போது கோபப்படாத நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்வதற்கு எதற்கு கிண்டல் செய்கிறீர்கள் இருக்கலாம் மக்களுக்கு பணி செய்வது தான் எனது ஆசை.

இன்றைய நிலை என்பது அவசர நிலை. இப்போதைய நிலை தமிழ்நாட்டிற்கு பயன் உள்ளதாக வேண்டும், எதிர்வாத சக்திகளுக்கு கைக்கூடி விடக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு இது.இப்போதைய முடிவு தான்

இன்னும் ஒரு வருடம் ( நாடாளுமன்ற தேர்தல்) கழித்து எடுக்க வேண்டிய முடிவை அவசரப்படுத்தி இப்போது சொல்ல முடியாது. காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.