Entertainment
லோஸ்லியா ஏன் இவ்வளவு மோசமானவராக உள்ளார்?
பிக் பாஸ் நிகழ்ச்சி 3 ஆனது அனைவராலும் பேசப்படும் அளவு சென்று கொண்டிருக்கிறது, தயாரிப்புக் குழு டாஸ்க் என்கிற பெயரில் எதையாவது கொடுத்து பிரச்சினையைத் தூண்டுவதிலேயே குறிக்கோளாக உள்ளது.
நேற்று முன் தினம் வழக்கம்போல் நாமினேஷன் ப்ராசஸ் நடந்தது. இதில் கஸ்தூரி, சேரன், தர்சன், சாண்டி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபின் கஸ்தூரியின் முதல் நாமினேஷன் இதுவே ஆகும். அவர் நிச்சயம் நாமினேட் ஆவார் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும்.

ஆனால் இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், தன்னுடைய அப்பா இயக்குநர் சேரன் போலவே இருப்பார் என்று அவரை சேரப்பா… என்று அழைத்தவர் லாஸ்லியா.
ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக மக்கள் மனதினைக் கொள்ளையடித்த லோஸ்லியா, கவினின் காதல் கொண்டபின் யாரைப் பற்றியும் கவலை இல்லாமல் இருக்கிறார். சாக்ஷி அவ்வளவு அழுது புலம்பியபோதும் கல் மனதாகவே இருந்தார்.
சேரனை கவின் கிண்டல் செய்யும்போதும் அமைதி காத்தார், நேற்று முன் தினம் நடந்த எலிமினேஷனில், சேரன் பெயரை சொன்னார் லோஸ்லியா.
இவருடைய செயலை விமர்சித்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் பார்வையாளர்கள்.
போன வாரம் வரை சேரன் செய்தது துரோகம் என்று சொல்லிய லோஸ்லியா இப்போ எங்கே முகத்தை வெச்சிக்குவார் என்று கேட்டு வருகின்றனர்.
