குல தெய்வ வழிபாடு ஏன் நமக்கு மிக மிக முக்கியமானது…..

c80561ec25235e7fe8e2299bab3a159e

நம் குடும்பத்தில் பல பிரச்சனைகளும், கஷ்டங்களும் மாறி மாறி வரும். ஏன் இப்படி ஏற்படுகிறது என்றால் இதற்கு பல காரணங்கள் உள்ளது. இதில் மிக முக்கியமான காரணம் குல தெய்வத்தை வழிபடாததே…

ஆம், இது உண்மை தான். நாம் மற்ற தெய்வங்களை வணங்குவதைக் காட்டிலும் நமக்கான குல தெய்வத்தை தவறாமல் தரிசனம் செய்து வந்தாலே போதுமானது. நம் குடும்பத்தில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். 

ஏனெனில் குல தெய்வ வழிபாடு என்பது நம் பிரபஞ்சத்தையே வணங்குவது போலயாம். அதாவது நம்மை படைத்த பிரம்மனை வணங்குவதற்கு ஈடாகுமாம். நம் குலதெய்வத்தை முதலில் வழிபாடு செய்வது என்பது நம் தாய், தந்தையரை வணங்குவது போல. அதாவது நம் குடும்பத்திற்கே தாய், தந்தையர் என்றால் அது நம்முடைய குலதெய்வம் தான்.

இப்படி குலதெய்வத்தை வணங்க கோவிலுக்கு தான் செல்ல வேண்டிய என்ற அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே நம் குல தெய்வத்தின் பெயரை சொல்லியோ அல்லது போட்டோ இருந்தால் போட்டோவை வைத்து ஒரு சூடம் ஏற்றி மனம் முருகி வேண்டினாலே போதுமானது. துன்பம் எல்லாம்

நீங்கி சிறிது சிறிதாக நம் குடும்பத்தில் இன்பம் வந்து சேரும். அதாவது நமக்கு எதாவது தோஷம் இருந்தாலும் நீங்கும். எப்போதும் நம் இஷ்ட தெய்வத்தை முதலில் வணங்குவது தான் நம் அனைவருக்கும் நல்லது.
 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.