கடல் நமக்கு ஏராளமான வளங்களை வழங்குவதோடு மீனவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. கடலில் எண்ணிலடங்கா பல பொக்கிஷங்கள் நிறைந்துள்ளது. அதில் ஒன்று தான் திமிங்கிலம். கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் பெரிய உயிரினம் என்றால் அது திமிங்கிலம் தான்.
சின்ன சின்ன மீன்களை வேட்டையாடி உண்ணும் திமிங்கலத்தின் எச்சில் அல்லது வாந்தி விலைமதிக்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. Ambergris என அழைக்கப்படும் இது திமிங்கலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேறும் ஒரு வகையான திடக்கழிவு பொருளாகும்.
பொதுவாக, திமிங்கலங்கள் இதர மீன்களை வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டவை. அப்படி வேட்டையாடி உண்ணும்போது அந்த மீன்களின் கூறிய உறுப்புகள், முட்கள் மற்றும் பற்களால் திமிங்கலத்தின் உள் உறுப்புகளில் காயம் ஏற்படவும், செரிமான பிரச்சனை ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே அதை தடுப்பதற்காக இயற்கையாகவே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் Ambergris எனப்படும் மெழுகுபோன்ற திரவம். இந்த பொருளை திமிங்கலம் வெளியேற்றும் போது, கடலின் மேல் பகுதியில் மெழுகு போன்று மிதக்கும்.
இந்த மெழுகானது மருத்துவ பொருள் தயாரிக்கவும், விலை உயர்ந்த வாசனை திரவங்களை தயாரிக்கவும் பயன்படுகிறது.
பார்ப்பதற்கு பாறாங்கல் போன்று காட்சியளிக்கும் Ambergris, சாம்பல், ப்ரவுன் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். முதலில் துர்நாற்றம் வீசினாலும், நேரம் செல்ல செல்ல வாசனை திரவியம் போல் அதன் நறுமணம் இருக்குமாம். Ambergris பால்வினை சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தரும் மருந்தாக விளங்குகிறது. ஆனால் இது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி கிடைத்தால் அந்த நபருக்கு அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.