ஜிம்மர் மருத்துவமனையில் வரும் காலத்தில் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நிர்வாகம் ஆணை பிறப்பித்து இருப்பதற்கு கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.
ஜிம்மர் மருத்துவ மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் அறிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு அறிக்கை தமிழில் மட்டும் வருகிறது. இந்நிலையில் ஜிம்மர் நிர்வாகம் சார்பில் இயக்குனர் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பாராளுமன்ற குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி, ஜிம்மர் மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள் பணியாளர் புத்தகம் மற்றும் பணியாளர் பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜிம்மர் மருத்துவமனையின் இந்த செயலுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒன்றிய அரசு திணிக்க முயலும் ஹிந்தி வேலை இல்லா திண்டாட்டத்தை தீர்க்குமா என கூறினார். சமத்துவமமின்னை மாறுமா? ஏதேனும் ஒரு சமூக பிரச்சனையாவது திருத்துமா என்றும் விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதல்ல எனகூறியுள்ளார்.