அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவது ஏன்? இந்த ஒரே காரணம் தான்..!

தங்கத்தின் விலை கமாடிட்டி மார்க்கெட்டில் உலகம் முழுவதும் ஒரே விலையாக இருந்தாலும் பிசிக்கல் தங்கம் வரிகள் வித்தியாசம் காரணமாக சில நாடுகளில் மட்டும் தங்கத்தின் விலை குறைவாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு குறைவாக கிடைக்கும் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதும் சுங்கத்துறை அதிகாரிகள் தினந்தோறும் தங்க கடத்தலை தடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அப்படி இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளில் எந்த அளவுக்கு தங்கம் விலை குறைந்திருக்கிறது என்பதை பார்ப்போம். இந்தியாவை பொறுத்தவரை 24 காரட் சுத்த தங்கம் தற்போது ஒரு கிலோ 62 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆனால் அண்டை நாடுகளில் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை மிகவும் குறைவு என்பதால் தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளிலிருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக சிங்கப்பூர் துபாய் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அப்படி என்றால் அந்த நாடுகளில் எவ்வளவு தங்கம் விலை என்பதையும் தற்போது பார்ப்போம். சென்னையில் இன்றைய தேதியில் ஒரு கிலோ 62 லட்சம் தங்கம் விலை இருக்கும் நிலையில் துபாயில் 24 கேரட் தங்கம் விலை ஒரு கிலோ 54 லட்சத்திற்கும் குறைவு என்பது குறிப்பிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு கிலோ 8 லட்ச ரூபாய் துபாயில் குறைவாக விற்பனை பெறுகிறது

ஆனால் அதே நேரத்தில் தாய்லாந்து நாட்டில் 24 கேரட் தங்கம் ஒரு கிலோ 51 லட்ச ரூபாய் தான் விற்பனையாகிறது. அப்படி என்றால் இந்தியாவை விட 11 லட்சம் ரூபாய் ஒரு கிலோவிற்கு தாய்லாந்தில் குறைவாக விற்பனை ஆகிறது. மலேசியாவில் ஒரு கிலோ 24 கேரட் தங்கத்தின் விலை 55 லட்சமாகவும் சிங்கப்பூரில் 57 லட்ச ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

ஒரு கிலோவிற்கு லட்சக்கணக்கான ரூபாய் வித்தியாசம் இருப்பதால்தான் அண்டை நாடுகளிலிருந்து தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்திற்கான இறக்குமதி வரி இந்தியாவில் அதிகம் என்பதன் காரணமாக தான் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள் ஆண்கள் என்றால் 20 கிராம் தங்கமும் பெண்கள் என்றால் 40 கிராம் தங்கமும் பில்லுடன் கொண்டு வரலாம். அதற்கு மீறி தங்கத்தை கொண்டு வந்தால் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.