Connect with us

உச்சத்திற்கு சென்று கொண்டு இருந்த தங்கத்தின் விலை திடீரென சரிய என்ன காரணம்? பரபரப்பு தகவல்

News

உச்சத்திற்கு சென்று கொண்டு இருந்த தங்கத்தின் விலை திடீரென சரிய என்ன காரணம்? பரபரப்பு தகவல்

கொரனோ வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் மிக அதிகமாக இருந்ததால் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. இந்திய பங்குச் சந்தை உள்பட உலகின் அனைத்து பங்குச்சந்தைகளும், வீழ்ச்சி அடையத் தொடங்கியது

இதனை அடுத்து முதலீட்டிற்கு பாதுகாப்பானது என தங்கத்தையே பெரும்பாலான மக்கள் முடிவு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது

அதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சிகள் மதிப்பும் குறைந்து கொண்டே வந்ததாலும் தங்கத்தின் விலை ஏறியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் விரைவில் கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் விடுபடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது இதனை அடுத்து தங்கத்தை வாங்கியவர்கள் தற்போது விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் இந்திய பங்குச் சந்தை உள்பட அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஓரளவுக்கு முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. இதனை அடுத்து தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தை விற்று விட்டு மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது

அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாட்டு கரன்சிகள் மதிப்பும் வலுவாகி வருவதாலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த 6 மாதங்களுக்கு முன் இருந்த விலைக்கு விரைவில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top