Connect with us

தாய்மொழி பயன்படுத்தாமல் ஏன் அனைத்துக்கும் ஆங்கிலம்?: பிரதமர் கேள்வி

modiiii

News

தாய்மொழி பயன்படுத்தாமல் ஏன் அனைத்துக்கும் ஆங்கிலம்?: பிரதமர் கேள்வி

டெல்லியில் நேற்றும் இன்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த மாநாட்டில் இன்று இந்தியாவில் உள்ள பல மாநில முதல்வர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நம் தமிழகத்தின் சார்பில் சட்ட கல்வித்துறை அமைச்சர் ரகுபதி முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் ஏன் மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது என்றும் மோடி கேள்வி எழுப்பினார். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கில மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது ஏன் என்றும் கேள்வி கேட்டார்.

மொழி என்பது நீதியை பெறுவதற்கான ஒரு வகையான தடையாக இருப்பதாக டெல்லியில் பிரதமர் மோடி பேசி கொண்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top