அட்சதை ஏன் போடுகிறோம்

da4c49d4779ee9954dbcc213df11893a

பொதுவாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு  மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு  தொழில் துவங்கும் நம் வீட்டு வாரிசுகளுக்கு ஏன் அட்சதை போடுகிறோம்.

முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.
சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்; ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.

ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறை.

 .
மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து,
உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களின்  ஆசியை நமக்கு வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும்  முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.
இந்த அமைப்பில் அமையும் திருமணம் மற்றும் தொழில்கள், சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று , சகல நலன்களையும் அடையும் என்பது உறுதி .

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.