பிக்பாஸ் வீட்டில் நேற்று 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக் கொண்டு கேபி வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்று புரோமோ வீடியோவில் இருந்து வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்
நேற்றைய எபிசோடில் அந்த காட்சி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 5 லட்ச ரூபாய் ஆஃபர் என்று பிக்பாஸ் அறிவித்தவுடன் முதல் நபராகக் கேபி என்று அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டார். அவசரப்பட வேண்டாம், அடுத்த பெட்டி வரும் என்று மற்ற போட்டியாளர்கள் அறிவுறுத்திய போதும் கேபி பெட்டியை எடுத்தது எடுத்ததுதான், நான் வெளியே போகிறேன் என்று கூறியது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் திடீரென ரியோ தனக்கு அந்த பெட்டி வேண்டும் என்றும், தான் வெளியேற போவதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
விஜய் டிவியின் ஆதரவுடன் இறுதிப் போட்டி வரை வந்துள்ள ரியோ, டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருக்கும் நிலையில் அவர் ஏன் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே போகப் போகிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது
ஆனால் கேபி விடாப்பிடியாக தான் பெட்டியை எடுத்து எடுத்ததுதான் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். அதன் பின்னர் அவர் சோம் சேகரிடம் தனியாக கூறியபோது ’இந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு ரியோ வெளியே போவதற்காக முயற்சி செய்தது தனக்கு தெரிந்ததாகவும் அதனால்தான் ரியோவை காப்பாற்றுவதற்கு தான் இந்த பெட்டியை எடுத்துக் கொள்வதாகவும் இந்தப் பெட்டியை தான் மனதார எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இதை எடுக்கும் போது எனக்கு அந்த அளவுக்கு வருத்தம் இருந்ததாகவும் கூறினார்
ஆகமொத்தம் கேபி அந்த பெட்டியை தனக்காகவும் பணத்திற்காகவும் எடுக்க வில்லை என்றும் ரியோ போய்விடக்கூடாது என்பதற்காக எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது