வெள்ளைக்காரங்க நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தாங்க.. ஏன்னு தெரியுமா?

இந்தியாவுக்கு சுதந்திரம் ஆக.15, 1947ல் கிடைத்தது என்று எல்லோருக்கும் தெரியும். அது எத்தனை மணிக்கு என்று தெரியுமா? ஏன் அந்த நேரத்தில் கொடுத்தார்கள் என்பது தெரியுமா? அதுபற்றி இப்போது பார்க்கலாம்.

இந்திய சுதந்திரப் போராட்டம் 1940க்கு அப்புறம் தான் தீவிரமாகவே இருந்தது. அந்த நேரத்தில் தான் இரண்டாம் உலகப்போரும் வந்தது. அந்தப் போரால ஆங்கில அரசுக்கு கஜானா வேகமாக காலியானது. அவங்களால சொந்த நாட்டைக்கூட நிர்வாகம் செய்ய முடியாத நெருக்கடி சூழல் உருவானது.

1945ல் பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றினாங்க. இதுக்கு முக்கியமான காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா அரசாங்கம் தனது வாக்குறுதியில் இந்தியா உள்பட பல காலனி நாடுகளுக்கு சுதந்திரத்தை நாங்க வழங்கிடுவோம்னு சொன்னாங்க.

அதனால ஆங்கில அரசாங்கம் 1948 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. இதற்கிடையில் 1947ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி இந்தியாவோட கடைசி வைஸ்ராயாக மௌண்ட் பேட்டன் பொறுப்பேற்றார்.

Nehru and Jinnah
Nehru and Jinnah

உடனடியாக நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினாங்க. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியல. இதுக்கு என்ன காரணம்னா ஜின்னா தனிநாடு கோரிக்கையில ரொம்ப பிடிவாதமா இருந்தாரு. நாட்டில ரொம்ப பதட்டமான சூழல் உருவானது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத மௌண்ட் பேட்டன் பிரபு முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாங்க.

அப்போது 1947 ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு பண்ணினாங்க. ஜூன் 3 மௌண்ட்பேட்டன் திட்டம்னு அறிமுகப்படுத்தப்பட்டது.

mount pattern prabhu
mount pattern prabhu

மௌண்ட்பேட்டனுக்கு ஆக.15 தான் விருப்பமான தேதி. இரண்டாம் உலகப்போரின் முடிவுல 1945 ஆக.15ல தான் ஜப்பானிய வீரர்கள் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த மௌண்ட் பேட்டனிடம் சரணடைஞ்சாங்க. இதனால தான் இந்தியாவுக்கு அன்று சுதந்திரம் வழங்க அவர் விருப்பப்பட்டார்.

இந்தியாவுக்கு ஆக.15ல் சுதந்திரம் என்று சொன்னதுமே ஜோதிடர்கள் அந்த நாள் சரியில்லை. 2 நாள்கள் கழித்துக் கொடுக்கலாம்னு இந்தியத்தலைவர்களுக்குக் கோரிக்கை வைத்தனர். ஆனால் மௌண்ட் பேட்டன் ஆக.15ல தான் இந்தியாவுக்கு சுதந்திரம் என்பதில் உறுதியா இருந்தாரு.

இந்த நெருக்கடியான சூழலில் என்ன நடந்தது தெரியுமா? ஆங்கிலேயர்கள் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். ஆனால் நம் இந்தியர்களுக்கோ அதிகாலை 5 மணி தான் புதிய நாள். அதனால் தான் ஆக.15 நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.