அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது ஏன்?

dbd20f28fc687b762318b940c7f045cf

 சட்டமன்ற தேர்தலில்  பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர். அதிலும் குறிப்பாக முந்தைய  ஆளும் கட்சியான அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. மேலும் தற்போது அதிமுக  எதிர்க்கட்சியாக உள்ளது என்பதும் உண்மைதான். அதிமுக கூட்டணியில் அதிக சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட கூட்டணி கட்சி என்றால் அதனை பாமக என்றே கூறலாம். இந்த  நிலையில் இந்த கூட்டணி தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது.13d5159f310f65bc059747b2cc362d72

இந்நிலையில் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன் என்று விளக்கமளிக்கிறார் பாமக செய்தி தொடர்பாளரான பாலு. அதன்படி பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுக-பாமக இடையே முரண்பாடு எதுவும் இல்லை என்றும் பாலு கூறியுள்ளார் .கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு போதிய அவகாசம் இல்லாததால் தனித்துப் போட்டியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பாமக குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய கருத்துக்களுக்கு பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டாம் என்றும் யூகத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

ஆனால் பாஜக கூட்டணியில் பாமக தொடர்கிறது என்றும் பாலு விளக்கமளித்துள்ளார். மேலும் அடுத்து வரும் தேர்தல்களில் நிலை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். பாமக தனித்துப் போட்டியிடுவது அரசியல் ரீதியாக பெரிய விஷயம் அல்ல என்றும் பாலு கூறியுள்ளார். அதிமுக மேற்கொள்ளப்பட்டிருந்தது சட்டமன்ற தேர்தலுக்கான உடன்பாடு மட்டுமே என்றும் பாலு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment