38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்? ஏன் இந்த இடைவெளின்னு தெரியுமா?

மிஸ்டர் பாரத் படத்திற்குப் பிறகு அதாவது 38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணைந்து நடிக்க சத்யராஜ் சம்மதித்துள்ளாராம். அது தான் லோகேஷ் கனகராஜின் கூலி படம். ஏன் இவ்வளவு இடைவெளி என்று பார்ப்போம்.

1994ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினிகாந்த் நடித்த வீரா படமும், சத்யராஜ் நடித்த வண்டிச்சோலை சின்ராசு படமும் வெளியானது. அப்போது வீரா மகத்தான வெற்றியைப் பெற்றது. அதே நேரம் சத்யராஜின் படமும் வெற்றி பெறும் வகையில் இருந்தது. ஆனாலும் விநியோகஸ்தர் தரப்பில் ரஜினி படம் போல் வரவேற்பு இல்லை என்பதால் வெறுப்படைந்தார் சத்யராஜ்.

2006ம் ஆண்டு சிவாஜி படத்தின் போது சத்யராஜ் வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்தார். சத்யராஜ் அப்போது பீக்கில் இருந்த நேரம் என்பதால் வில்லனாக நடித்தால் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ என மறுத்து விட்டாராம்.

Mister Bharath
Mister Bharath

ரஜினிக்கு அந்த கேரக்டரில் சத்யராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாராம். ஆனால் அவர் இப்படி சொன்னதால் அந்த வேடம் சுமனுக்குக் கிடைத்தது.

80களில் ரஜினியின் பாயும் புலி, மூன்று முகம், நான் சிகப்பு மனிதன், ஸ்ரீ ராகவேந்திரா, தம்பிக்கு எந்த ஊரு படங்களில் வில்லனாக சத்யராஜ் நடித்தார். அதே நேரம் ரஜினியுடன் இணைந்து நடித்த மிஸ்டர் பாரத் அவருக்கு பட்டி தொட்டி எங்கும் பெயரைக் கொண்டு போய்ச் சேர்த்தது.

இவ்வளவு சூப்பர்ஹிட் படங்களும் ரஜினியை வைத்து சத்யராஜிக்குக் கிடைத்தபோதும் அவர் இப்போது மறுத்தது ரஜினி செய்த உதவியை மறந்துவிட்டார் என்றும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

ஸ்ரீராகவேந்திரா படத்தில் சில்க்குடன் இணைந்து சத்யராஜ் ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் போட்டாராம். சாமி படத்தில் எதற்கு இந்த குத்துப்பாடல் தேவையில்லாமல் கவர்ச்சி என பாலசந்தர் அதை நீக்கிவிட அதற்கு ரஜினி தான் காரணம் என சத்யராஜ் நினைத்தாராம்.

சத்யராஜ் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக வில்லன் பாத்திரத்தைத் தவிர்த்தார். ஆனால் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிக்க சம்மதித்துள்ளாராம். ஏன்னா இந்தப் படத்தில் அவர் ரஜினியின் நண்பன் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் சத்யராஜூம் நடிக்க சம்மதித்தாராம். இந்தப் படத்தில் கமலும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...