மேகதாது அணை கட்டுவது எதற்காக? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

கர்நாடகாவில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில்  மேகதாது அணை கட்டுவதற்காக  ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசு அறிவித்தது. இந்த  செய்தி ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும்  வந்துள்ளன.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரியான அறிவிப்பை தெரிவித்துள்ளதால் பல கட்சி அரசியல் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்தும் அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே கிடைத்து வரும் சூழலில்  தற்போது மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டி தண்ணீர் கூட கிடைக்காது என டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்றும் உடனடியாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இதற்காக காங்கிரஸ் பேரணியை நடத்துவதாகவும், பாஜக கட்சி 1000 கோடி பட்ஜெட் ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டிய விவசாயிகள் தமிழக அரசு சட்டப்பூர்வமாக செயல்படாமல் பேச்சு வார்தைகளில் மட்டும் செயல்படுவதாக கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment