Connect with us

“கொலைக்குற்றம்”: கைது செய்யாமல் போலீஸ் கெஞ்சுவது ஏன்? நீதிமன்றத்தின் அதிரடி கேள்வியால் அதிர்ந்து போன அரசு !!

lakhimpur-

News

“கொலைக்குற்றம்”: கைது செய்யாமல் போலீஸ் கெஞ்சுவது ஏன்? நீதிமன்றத்தின் அதிரடி கேள்வியால் அதிர்ந்து போன அரசு !!

superme court

“கொலைக்குற்றம்”: கைது செய்யாமல் போலீஸ் கெஞ்சுவது ஏன்? நீதிமன்றத்தின் அதிரடி கேள்வியால் அதிர்ந்து போன அரசு !!

தற்போதும் இந்தியாவில்  பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் அணி திரண்டு வந்தனர்.lakhimpur

மேலும் அவர்கள் மீது வரிசையாக கார் ஏறி கொல்லப்பட்ட சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவியது. மேலும் அதனை பார்த்து அனைவருக்கும் பபரப்பை உருவாக்கியது. அந்த படி லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கையில் அடுத்தடுத்து கார்  வரிசையாக விவசாயிகள் மீது ஏற்றியது.

 

வனத்துறைக்கு ஆட்டம் காட்டும் புலி! கண்ணுக்கே தட்டுப்படவில்லை!! வனத்துறை திணறல்!!!

lakhimpur

மேலும் இதில் பரிதாபமாக விவசாயிகள் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த காரில் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்த வீடியோவில் தெரியவந்தது. இதனால் மக்கள் பலரும் இவை திட்டமிடப்பட்ட கொலை என்று கூறினார்.superme court

இதுகுறித்து தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரபிரதேச மாநிலத்தை பார்த்து அதிரடியாக பல கேள்விகளை கூறியுள்ளார். அதன்படி கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள வரை கைது செய்யாமல் போலீஸ் கெஞ்சி கொண்டு இருப்பது ஏன்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் தயவு செய்து பாருங்கள் தயவு செய்து கூறுங்கள் என்று ஆஷிஷ் மிஸ்ராவிடம் போலீஸ் கெஞ்சுவது ஏன் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநில அரசும் போலீசும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டித்து கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் நடந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததுள்ளதாக  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

ashishmishraவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷை கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை இப்படித்தான் அலட்சியமாக அறிவீர்களா? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்படி நடத்துகிறீர்கள்? என்று உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வியும் வைத்துள்ளார். கொலை வழக்கில் மற்ற கைதிகள் எப்படி நடத்துகிறீர்கள் அந்த முறையிலேயே ஆசிஸ் மிஸ்ராவை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எதிரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளோம் என்று கூறுவது சரியானதல்ல என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர் போலீசில் ஆஜராக நாளை காலை 11 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சால்வே தரப்பில் கூறப்படுகிறது.

மாநில அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகினார். நாளை காலை 11 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்டுள்ள வரவில்லை எனில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சால்வே கூறினார்.

உயிரிழந்தவர்களில் துப்பாக்கி குண்டு காயம் இருப்பதாக உடற்கூறு ஆய்வில் கூறப்படவில்லை என்றும் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வழக்கு மிகவும் தீவிரமானது தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என்று மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top