அம்மா மினி கிளினிக்குகள் எதற்காக மூடப்பட்டது? சட்டப் பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம்!

கடந்த ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அவற்றில் அம்மா உணவகம் என்பது தற்போது வரை செயல்பட்டுக் கொண்டுதான் வருகிறது. ஏனென்றால் தற்போது  தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதனால் அம்மா உணவகம், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் மூடப்படுமோ? என்ற ஐயத்தில் இருந்த நிலையில் திமுக அரசு அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆனால் அம்மா மினி கிளினிக்குகள் எதிர்பாராதவிதமாக மூடப்பட்டது. இது குறித்து சட்டப் பேரவையில் விவாதம் நிகழ்கிறது. அதன்படி இன்று கூடிய சட்டப்பேரவையில் திமுக அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ மற்றும் திமுகவுக்கு இடையே விவாதம் நிகழ்கிறது.

அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக திட்டம்தான் என்று அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த போதே போடப்பட்ட அரசாணையை குறிப்பிட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment