இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை ஏன்? இயக்குநர் ஷங்கர் விளக்கம்

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜுலை 12-ல் உலகம் முழுவம் வெளியாகிறது. இந்தியன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படம் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போதைய சூழலில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாகக் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தியன் படத்தின் கதையானது தமிழ்நாட்டை மட்டும் பேசியது. ஆனால் தற்போது வெளியாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தேசிய அளவிலான பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் போகிறது. கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்புப் பணிகளில் இந்தியன் 2 திரைப்படம் இருந்து வருகிறது. படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என முடிவெடுத்து இந்தியன் 3-ம் பாகமும் வெளிவர இருக்கிறது.

இந்தியன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இன்று கேட்டாலும் பாடல்கள் அனைத்தும் நரம்பைப் புடைக்க வைக்கும். தேச பக்தி நம்மை அறியாமலேயே மனதிற்குள் எழும். மேலும் பின்னனி இசையும், பாடல்களும் இந்தத் தலைமுறை ரசிகர்களும் இன்றும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

டிரைலர் மட்டும் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரம் இல்லையென இசை ரசிகர்கள் புலம்பித் தவித்தனர். எனினும் தற்போதைய சூழலுக்கு அனிருத்தின் இசை 2கே கிட்ஸ்களையும் கவர்வதால் ஷங்கர் அனிருத்தை நாடியிருக்கலாம் என விமர்சனம் செய்தனர்.

என்னோட படத்துக்கு 100ரூபாய் தான் டிக்கெட்.. தாராள சலுகையை அறிவித்த பார்த்திபன்..

ஆனால் இதற்குப் பதில் கொடுக்கும் விதமாக இந்தியன் 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குர் ஷங்கர் அனிருத்தை ஏன் தேர்வு செய்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ஷங்கரின் முந்தைய படமான 2.0 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

அப்போதைய சூழலில் 2.0 படத்திற்கு இசையமைப்பது மிகவும் சவாலாக இருந்தது. மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்ததால் அதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. எனவே ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் படத்திற்கு தனது அசாத்திய உழைப்பைக் கொடுத்திருந்தார். மேலும் பாடல்களுக்கும் அவர் இசையமைக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் தான் இந்தியன் 2 பணிகள் ஆரம்பமாகின. எனவே இந்த நேரத்தில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அதிக வேலைப்பளு கொடுக்க வேண்டாம் என எண்ணியிருக்கிறார். அதே சமயம் அனிருத்தும் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருந்தார். அவருடைய இசையையும் ரசிக்க ஆரம்பித்தேன். எனவே இந்தியன் 2 படத்திற்கு அவரையே இசையமைக்க முடிவு செய்தேன்.” என்று ஷங்கர் கூறியிருக்கிறார்.

இந்தியன் 2 படத்திலும் கம்பேக் இண்டியன், தாத்தா வராரு போன்ற பாடல்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews