மோடிக்கு ஆதரவாக செயல்படுவது ஏன்?.. ட்விட்டர் நிறுவனத்தைச் சாடிய ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டர் நிறுவனமானது மோடி அரசுக்கு ஆதரவு செயல்படுவதாகவும் அதனால் தன்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வாலுக்கு கடிதம் எழுதி இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்றால் பாருங்களேன்.
ராகுல் காந்தி டெல்லியில் சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து கண்டிக்கும் வகையில் பதிவினைப் பதிவிட்டு இருந்தார்.
மேலும் அந்தச் சிறுமி உட்பட குடும்பத்தினர் அனைவரும் இருப்பது போன்ற புகைப்படத்தினையும் பதிவிட்டு இருந்தார்.
அந்த போஸ்ட்டை ட்விட்டரி நிறுவனம் நீக்கியது, அதுபோக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள் குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவிற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவினைப் பெற்று இருந்தநிலையில் அதுவும் நீக்கப்பட்டது.
அதுபோக ராகுல் காந்தியைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியில் இருந்து மாறாமல் உள்ளது குறித்தும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் அக்கௌண்ட் முடக்கப்பட, ட்விட்டர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் அவரின் நண்பர்களிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார்.
அவர்கள் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் என்று ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிட்டு இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.
