Connect with us

இவரா? இல்ல அவரா?….யார் புதிய முதல்வர்? அமித்ஷா தலைமையில் ஆலோசனை;

deputy mayor

News

இவரா? இல்ல அவரா?….யார் புதிய முதல்வர்? அமித்ஷா தலைமையில் ஆலோசனை;

இவரா? இல்ல அவரா?….யார் புதிய முதல்வர்? அமித்ஷா தலைமையில் ஆலோசனை;

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு மாநிலங்களில் பாஜகவினர் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி புதிதாக உதயமாகியுள்ளது. அதன்படி பஞ்சாபில் சில நாட்கள் முன்பு அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பதவி ஏற்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் யார் முதல்வராக பதவி ஏற்கிறார் என்ற கேள்வி கட்சிக்குள் நிலவி உள்ளது. இந்த நிலையில் அமித்ஷா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உத்தரகாண்ட் மாநில முதல்வர் தேர்வு பட்டியலில் புஷ்கர் சிங் தாமி, சத்பால் மகாராஜ் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top