News
கொரோனா உலக அளவில் இன்னும் மோசமடையும்: WHO எச்சரிக்கை

உலகில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டுவித்து வரும் நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் சுமார் 1.32 கோடி பேருக்கு பரவி உள்ளது என்பதும் கொரோனா வைரஸால் இதுவரை சுமார் 5.74 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். உலக சுகாதார மையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இந்த நிலையில் உலக சுகாதார மையம் நிறுவனம் தற்போது உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் உலக அளவில் கொரோனா மேலும் மோசமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது
மனித குலத்தின் மிகப் பெரிய ஒரே எதிரியாக உருவெடுத்துள்ள கொரோனாவுக்கு எதிரான போரில் பல நாடுகள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்றும் இந்த ஆண்டு இறுதியில் கொரோனாவின் கோரப்பசிக்கு 13 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அதிலிருந்து தப்ப வழி எதுவுமே இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான அட்ரஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் கொரோனா வைரஸை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொரு அரசும் தலைவரும் தனி நபரும் தங்கள் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினால் பரவலை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
