
பொழுதுபோக்கு
சரத் குமாரின் நாட்டாமை படத்தில் நடிக்க வேண்டியது யார் தெரியுமா?
நாட்டாமை திரைப்படம் 1994ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியானது. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது.இப்படத்தில் நடிகர் சரத்குமார் இரு வேடங்களில் (அண்ணன் ,தம்பி கதாப்பாத்திம்) நடித்து கலக்கி இருப்பார். இவரை தவிர இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கவுண்டமணி, செந்தில், பொன்னம்பலம் ஆகியோரும் நடித்து அசத்தி இருந்தார்கள்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இப்படத்தை பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இப்படத்தில் சரத்குமாரின் தந்தையாக விஜயகுமார் நடித்திருந்த கதாபாத்திரத்தில், முதன் முதலில் நடிக்கவிருந்தது இயக்குனர் பாரதிராஜா. ஆனால் ஒரு சில காரணங்களால் பாரதிராஜாவால் இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போனதாக அவரே சமீபத்திய பேட்டியில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதே போல், முதலில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரும் ஒரு சில காரணங்களால் இதில் நடிக்க முடியாமல் போனது. இவர்கள் இருவரும் தங்களுக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பை தவற விட்டனர். இப்படம் இன்னும் எவளோ ஆண்டுகள் ஆனாலும் நின்னு பேசுகிறது.
பளாக் பாஸ்டர் சாதனைகள் படைத்த நாட்டாமை திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டும்தானாம். இதில் கதாநாயகனான சரத்குமாருக்கும், காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணிக்கும், படத்தின் இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் ஆகியோருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது.
தளபதி 67-க்காக விலகுகிறேன்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
மீதமிருக்கும் ரூபாய் 35 லட்சத்தில் படத்தில் நடித்த மற்ற பிரபலங்களான மீனா, குஷ்பூ, மனோரமா, விஜயகுமார், சங்கவி, பொன்னம்பலம், செந்தில் உள்ளிட்டோருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
