News
ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடிப்பது உண்மையா? ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தும், இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கியும் வருகிறது. இதனை அடுத்து கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன
ஒரு சில நாடுகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் சமீபத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் தனது மகளுக்கு அந்த தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்
இதனை அடுத்து உலகம் முழுவதும் மிக விரைவில் ரஷ்யாவிடமிருந்து தடுப்பூசியை வாங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலகம் சுகாதார நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது
ஏற்கனவே 2000 பேருக்கு இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்து முடித்துள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதை ரஷ்யா வரவேற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்த தடுப்பூசியை ஏற்றுக் கொண்டால் உலகம் முழுவதும் இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
