Connect with us

சந்திரமுகி 2 -வின் படத்தின் இசை அமைப்பாளர் யாருனு தெரியுமா?

chandramuki 2

Entertainment

சந்திரமுகி 2 -வின் படத்தின் இசை அமைப்பாளர் யாருனு தெரியுமா?

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கின்றனர். இவருடைய படங்கள் வருகிறது என்றாலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கடல் அலை போல மோதும் இவருடைய படங்களும் வசூல் சாதனைகள் செய்த்துள்ளது என கூறலாம்.

ரஜினி,பிரபு,ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி. இப்படம் பாக்ஸ் ஆபிசிலும் ரஜினிகாந்தின் தொழில் வாழ்க்கையில் சிறந்த நடிப்பில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் தன இந்த படம்.

chandramukhi 2 rajinikanth raghava lawrence image

இப்படத்தில் நண்பனின் மனைவியை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்து போராடுவார் ரஜினி. ஒவ்வொரு பாடல்களும் அதுமட்டுமில்லாமல் காலம் கடந்தாலும் இந்த படம் ரஜினியின் அசத்தலான நடிப்பிலும் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பில் சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான படமாக சந்திரமுகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராகவா லாரன்ஸ் ரஜினியின் முழு அனுமதியோடு இந்த படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

santhi

இரண்டாம் பாகத்தையும் வாசு தான் இயக்குகிறார். சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது அதேபோல அதிகமாக பேசப்படும் நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல நடிகைகள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. எனவே விரைவில் சந்திரமுகி படம் குறித்து தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் கைவிட்டதால் தற்போது லைக்கா நிறுவனம் இதை எடுத்துள்ளது. இப்படம் 3d போல இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மிக பெரிய அளவு பட்ஜெக்ட்-ல் உருவாக இருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

kiravaani

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக கீரவாணி எனும் எம்எம்.மரகதமணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இவர் பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 169 – படத்தின் டைட்டில் தெரியுமா?

தமிழிலும் நீ பாதி நான் பாதி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இசை கண்டிப்பாக தமிழ் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top