
பொழுதுபோக்கு
சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக களமிறங்க போவது யாரு தெரியுமா?
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கின்றனர். இவருடைய படங்கள் என்றாலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதி வசூல் சாதனைகள் செய்த்துள்ளது என கூறலாம்.
ரஜினி,பிரபு,ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி.இந்த படம் ரஜினியின் அசத்தலான நடிப்பிலும் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பில் சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராகவா லாரன்ஸ் ரஜினியின் முழு அனுமதியோடு இந்த படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போழுது இந்த படத்திற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இரண்டாம் பாகத்தையும் வாசு தான் இயக்குகிறார். சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது .
அதேபோல அதிகமாக பேசப்படும் நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல நடிகைகள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுந்தர். சி-க்கு பயத்தை காட்டிய திரைப்படம் எது தெரியுமா?
