டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் வின்னர் யார்? புள்ளிகள் விபரம்

889f6693d9e325da403c1b72b6ca6303

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடத்தப்பட்ட டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் கிட்டத்தட்ட இறுதியில் நிலைக்கு வந்துவிட்டது. 8 சுற்றுகள் முடிவில் இந்த டாஸ்க்கில் சோம் வெற்றி பெற்றதாக தெரிகிறது 

சோம் மற்றும் ரியோ ஆகிய இருவரும் முதல் இரண்டு இடத்தில் இருந்தாலும் சோம் 39 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் ரியோ 37 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் உள்ளனர். மற்ற போட்டியாளர்கள் முதலிடத்தில் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது

8de08c58af0493cf890dedb7c9f25800

இன்னும் ஒரு சுற்றில் மட்டுமே புள்ளிகள் தரவேண்டிய நிலையில் ரியோ அல்லது சோம் ஆகிய இருவரில் ஒருவர்தான் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் என்பதும் அதில் சோம் வெற்றிபெற 99 சதவீத வாய்ப்புகள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக சோம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதோடு இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கணிப்பின்படி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நுழைபவர்கள் ஆரி, பாலாஜி, ரியோ மற்றும் சோம் ஆகிய நால்வர் என்று கருதப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.