பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலே இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய இரண்டு புரமோ வீடியோவிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை கமல் அறிவிக்கப் போகும் அந்த நொடியை எதிர்பார்த்து அனைவரும் காத்திருப்பது போன்ற காட்சிகள் உள்ளன
சற்றுமுன் வெளியான இரண்டாவது புரமோவில் 5 போட்டியாளர்களும் வெற்றிக்காக காத்திருக்கின்றார்கள் என்றும் அவர்களில் ஒருவர் பெயரை நான் என் பையில் வைத்து இருக்கிறேன் என்றும் கமல் கூறுவது பரபரப்பை அதிகரித்துள்ளது
அதுமட்டுமின்றி ஐந்து போட்டியாளர்களின் படபடப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய தான் முடிவு செய்து இருப்பதாகவும் அதற்காக சில திட்டங்கள் வைத்துள்ளதாகவும் அவை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
மொத்தத்தில் 6 மணி நேர நிகழ்ச்சியை ஓட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு உத்திகளை பிக்பாஸ் குழுவினர் பயன்படுத்தி இருப்பார்கள் என்பது இன்றைய இரண்டு புரமோ வீடியோவில் இருந்து தெரியவருகிறது
இருப்பினும் ஆரிதான் டைட்டில் வின்னர் என்று அனைவருக்கும் தெரிந்த பின்னர் கமல் என்ன படபடப்பு ஏற்படுத்தினாலும் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு படபடப்பும் இருக்காது என்பதே உண்மை
#BiggBossTamil #GrandFinale – இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில..#பிக்பாஸ் #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/oBBpH2hDWz
— Vijay Television (@vijaytelevision) January 17, 2021