Sports
விவோ விலகியதால் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு குவியும் போட்டி: ஐபிஎல் நிர்வாகம் யாரை தேர்வு செய்யும்?

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட் நாட்கள் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே
இந்த ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ நிறுவனம் இருந்தது என்பதும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட நட்புறவு முறிவடைந்ததை அடுத்து சீனாவின் விவோ நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் விவோ இந்த ஆண்டுக்கான ஸ்பான்சரிலிருந்து விலகியதை அடுத்து ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்த முக்கிய நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
குறிப்பாக ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனமும், குளிர்பான நிறுவனம் கோகோ கோலாவுக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது
பைஜூஸ் நிறுவனம் ஸ்பான்சராக ரூ.300 கோடி வரை தர தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக ஏற்கனவே பைஜூஸ் நிறுவனம் இருப்பதால், அந்நிறுவனம் ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜியோ மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களும் போட்டியில் களத்தில் குதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
