
செய்திகள்
இலங்கையில் புதிய அதிபர் யார்? நாடாளுமன்றத்தில் இன்று தேர்தல்..!!
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இலங்கையில் அதிபருக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமான மாளிகையை விட்டு அதிபர் தப்பி ஓடினார்.
இதனால் மக்கள் அதிபர் மாளிகையில் இருந்த பொருட்களை பயன்படுத்தி அங்கிருந்து உணவு பொருட்களை உண்டு மகிழ்ந்தனர். இந்த நிலையில் இலங்கையில் தற்போது புதிய அதிபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, டலஸ், அழகுபெரும போட்டியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் ரணிலை ஆதரித்தாலும், அக்கட்சியம்பிக்கள் சிலர் டலசை ஆதரிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் 225 எம்பிக்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கோட்டப்பயாவின் பதவி காலம் முடியும் 2024 நவம்பர் வரை பதவியில் இருப்பார் என்றும் தெரிகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1993 ஆம் ஆண்டு அதிபர் ரணசிங்கே பிரேமதாசர் கொல்லப்பட்டதால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அதிபர் ஆனார் விஜய்துங்கா.
