’வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதில் யார்? பாலாவின் மெகா திட்டம்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ’வணங்கான்’ திரைப்படம் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இதுகுறித்து விரிவான அறிக்கையை பாலா வெளியிட்டிருந்தார் என்பது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியது மட்டுமின்றி இந்த படத்தின் தயாரிப்புப் பணிகளில் இருந்தும் அவர் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் அதர்வா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஷால் அல்லது ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

அதர்வாமேலும் இந்த படத்தை வேறு எந்த தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வர மாட்டார் என்பதால் தானே தயாரிக்க இருப்பதாக பாலா திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

’வணங்கான்’ படத்தின் புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவதால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதர்வாவை வைத்து படத்தை பாலா இயக்கும் ’வணங்கான்’ வெற்றிப் படமாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.