Connect with us

உ.பியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்?-என்னைத் தவிர யாரும் தெரிகிறார்களா? பரபரப்பை உருவாக்கிய பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி

செய்திகள்

உ.பியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்?-என்னைத் தவிர யாரும் தெரிகிறார்களா? பரபரப்பை உருவாக்கிய பிரியங்கா காந்தி!

உ.பியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்?-என்னைத் தவிர யாரும் தெரிகிறார்களா? பரபரப்பை உருவாக்கிய பிரியங்கா காந்தி!

இந்தியாவில் அடுத்த மாதம் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதனால் உத்திரபிரதேசம் மாநிலம் முழுவதும் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்தடுத்து தேசிய கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

priyanka rahul youth manifesto

இதனை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து வெளியிட்டனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று நிபுணர்கள் கேட்டதற்கு பிரியங்கா காந்தி கூறியது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரியங்கா காந்தி என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற நிருபரின் கேள்விக்கு என்னைத் தவிர வேறு யாரும் தெரிகிறார்களா? என்று பிரியங்கா காந்தி கூறினார்.

மீண்டும் நிபுணர் விடாமல் கேட்டதற்கு எனது முகம் தெரிகிறது அல்லவா? என்று பதிலளித்தார் பிரியங்கா காந்தி. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது கட்சியால் அறிவிக்கப்படாத நிலையில் பிரியங்கா பிரியங்கா காந்தி பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top