Connect with us

ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோவாவில் முதல்வர் வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு!

aap 1

செய்திகள்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோவாவில் முதல்வர் வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு!

ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோவாவில் முதல்வர் வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு!

இந்தியாவில் அடுத்த மாதம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

அதோடு உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துக் கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி வரிசையாக பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக கோவா மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கோவாவில் படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வரிசையாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top