ஒருவேளை அவராக இருக்குமோ? பாலாஜி முருகதாஸ் சொல்கிற சிறந்த போட்டியாளர் யார்?

வெளியாகி ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது பிக்பாஸ் அல்டிமேட். இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த பிக் பாஸ் சீசன் களில் விளையாடிய போட்டியாளர்கள் உள்ளனர்.

இது பிக்பாஸ் போலல்லாமல் குறுகிய கால நிகழ்ச்சி என்பதால் தொடங்கி முதல் நாளே நாமினேசன் ப்ராசஸ் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று பிக்பாஸில் சிறந்த விளையாடிய இரண்டு நபர்களை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் அல்டிமேட்டின் குரல் ஒலிக்கப்பட்டது.

இதில் வரிசையாக தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பலரும் தங்களுக்கு பிடித்தவர்களையும், உண்மையாக விளையாடியவர்களின் பெயரையும் கூறுகின்றனர். அப்போது சுஜா வருணி, நான் நானாகவே இருப்பேன் இன்று பிக் பாஸ் வீட்டில் உள்ள பாலாஜியை சிறந்து விளையாடியவர் என்று கூறினார்.

அதேவேளையில் பாலாஜி முருகதாஸ் எழுந்து நின்று தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். அப்போது இவர் அனைத்து வேலையும் செய்கிறார், அம்மியும் அரைக்கிறார் சமையலும் செய்கிறார்.

ஆனால் இவரின் பெயரை யாரும் குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது என்று கூறினார். பாலாஜி முருகதாஸ் அப்படி யாரைப் பற்றி கூறுகிறார் இன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கண்டு மகிழலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment