பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய புகழைப் பெற்றவர் ஓவியா என்பதும் ஆனால் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு பாதிலேயே அவர் போட்டியில் இருந்து வெளியேறி விட்டார் என்பதும் தெரிந்ததே
இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக புகழ் பெற்றவர் யார் என்ற ஒரு கருத்துக் கணிப்பை எடுத்தால் இன்றும் ஓவியாவுக்கு தான் முதல் இடம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஓவியா காதலித்த ஆரவ்வுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்ற நிலையில் ஓவியாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்
அந்த வகையில் தற்போது ஓவியா தனது காதலரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனது காதலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்த ஓவியா அதில் ’லவ்’ என்பதையும் குறிப்பிட்டு உள்ளார்
இதனை அடுத்து ஓவியா இவரை தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இருப்பினும்து ஓவியாவுக்கு முத்தம் கொடுத்த அந்த காதலர் யார் என்பது குறித்த தகவல் தற்போது எதுவும் இல்லை என்பதால் அவர் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலை அவரே அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Love pic.twitter.com/MFJsQylQeJ
— Oviyaa (@OviyaaSweetz) January 14, 2021