ட்விட்டர் சி.இ.ஓவாக பதவியேற்க இருப்பது இந்த பெண்ணா? யார் இவர்?

ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒரு பெண் சிஇஓ நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் ஆறு வாரங்களில் பதவி ஏற்பார் என்றும் எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்த நிலையில் அந்த பெண் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன.

ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓவாக தற்போது எலான் மஸ்க் இருந்து வரும் நிலையில் இன்று காலை திடீரென அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பெண் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார். அவர் இன்னும் ஆறு வாரங்களில் தனது பணியை தொடங்குவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த பெண் அதிகாரி யார் என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது.

அந்த பெண் அதிகாரி யார் என்பதை அதிகாரப்பூர்வமாக எலான் மஸ்க் குறிப்பிடவில்லை என்றாலும் அந்த பெண் லிண்டா யாக்காரினோ என்பது தெரியவந்துள்ளது. இவரை தான் எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓவுக்கு இண்டர்வியூ நடத்தி வருவதாக வதந்தி கிளப்பியது. இவர் இப்பொழுது என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்நிறுவனத்தின் விளம்பர மற்றும் கிளைன்ட் பார்ட்னர்ஷிப்களின் தலைவராக இருந்து வருகிறார் என்பதும் கடந்த 12 ஆண்டுகளாக இவர் அமெரிக்க ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேபிள் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் விளம்பர விற்பனையின் தலைவராக NBC Universal இல் சேர்ந்த லிண்டா ஒரு வருடம் கழித்து, விளம்பரம் மற்றும் கிளையண்ட் பார்ட்னர்ஷிப்களின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

twitter ceo1விளம்பரம் மற்றும் கிளையன்ட் பார்ட்னர்ஷிப்களின் தலைவராக தனது பணியை சிறப்பாக செய்து நெட்வொர்க் குழுக்களை ஒன்றிணைத்து NBC சொத்துக்களை அதிகரிக காரணமாக இருந்தார் என்பதும், நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் கூட்டாண்மைகளை மாற்றியமைத்த பெருமை இவருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது NBC Universal நிறுவனம் ஆண்டுதோறும் $10 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை நிர்வகிப்பதற்கு லிண்டா தான் காரணம். கடந்த 20210ஆம் ஆண்டு NBCUniversal இல் குளோபல் அட்வர்டைசிங் மற்றும் பார்ட்னர்ஷிப்களின் தலைவரானார்.

NBCUniversal இல் சேருவதற்கு முன், லிண்டா 19 ஆண்டுகள் டர்னர் என்டர்டெயின்மென்ட் விளம்பர விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் கையகப்படுத்துதல் ஆகியவற்றின் நிர்வாக துணைத் தலைவராகவும், COO ஆகவும் பணியாற்றினார்.

அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தொலைத்தொடர்பு துறையில் பட்டம் படித்த இவர் ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். லிண்டா கடந்த 2011 ஆம் ஆண்டில் தனியார் டிவி கருத்துக்கணிப்பில் 10 சக்திவாய்ந்த பெண்களில்” ஒருவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய ஆண்டு சம்பளத்திற்கு ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிய வரும் லிண்டாவின் தலைமையில் ட்விட்டர் நிறுவனம் எந்த அளவுக்கு முன்னேற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews