யார் கன்னிசாமி- நம்பியார் ஸ்வாமி சொல்வது என்ன

தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தியை பரப்பியவர் யார் என்று கேட்டால் நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அது நம்பியார் ஸ்வாமிகள் என்று. திரைப்படங்களில் கொடூர வில்லனாக காட்சி தந்த நம்பியார் ஸ்வாமிகள் நிஜத்தில் மிக சாதுவானவர் மிக சாந்தமானவர்.

நம்பியார் ஸ்வாமிகள் தான் தமிழ்நாட்டில் ஐயப்ப விரதத்தை முறைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல திரைப்பட நடிகர்களையும் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து வழி நடத்தி சென்றார்.

பொதுவாக முதல் முதல் அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர் கன்னிசாமி என்றும் 18 வருடம் தொடர்ந்து தடை இல்லாமல் அய்யப்பன் கோவில் சென்று விட்டு வந்து விட்டால் அவர் குருசாமி என்றும் கூறப்படுகிறது.

இது குறித்த மறைந்த திரு நம்பியார் ஸ்வாமிகள் பார்வை வேறு மாதிரி இருக்கிறது.

18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று  ஒரு முறை கூறி உள்ளார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே  நம்பியார் ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print